Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் Q2 நிகர லாபம் 3 மடங்கு உயர்வு

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் Q2 நிகர லாபம் 3 மடங்கு உயர்வு

வங்கியின் காலாண்டு நிகர லாபம் தொடர்ந்து இரண்டாவது முறையாக ரூ.1000 கோடியைத் தாண்டியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு நிதி முடிவுகளின்படி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் நிகர லாபம் கடந்த ஆண்டை விட ஏறக்குறைய மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டிற்கான நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கியின் வணிக வளர்ச்சி அதிகரித்ததாலும் வாராக்கடன் குறைந்ததாலும், நிகர லாபம் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த ரூ.352 கோடியிலிருந்து 196.5 சதவீதம், அதாவது ஏறக்குறைய மூன்று மடங்கு உயர்ந்து ரூ.1,045 கோடியாக உள்ளது. 

இதன்மூலம் வங்கியின் காலாண்டு நிகர லாபம் தொடர்ந்து இரண்டாவது முறையாக ரூ.1000 கோடியைத் தாண்டியுள்ளது. வங்கி ஈட்டிய வட்டிக்கும் வழங்கிய வட்டிக்கும் இடைப்பட்ட நிகர வட்டி வருமானம் 21 சதவீதம் அதிகரித்து 6,184 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

கட்டணங்கள் மற்றும் பிற வழிகளிலான வருமானம் 24.5 சதவீதம் உயர்ந்து 2,285 கோடி ரூபாயை தொட்டுள்ளது. அதேபோல், வங்கியின் முக்கிய செயல்பாட்டு லாபம் 38.5 சதவீதம் அதிகரித்து ரூ.2,527 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், வங்கியின் ஒட்டுமொத்தக் கடன் வழங்கும் அளவு ஆண்டுக்கு ஆண்டு 30.1 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.3,46,913 கோடியை எட்டியுள்ளது.

இக்காலகட்டத்தில் வாடிக்கையாளர்கள் வங்கியில் செலுத்திய மொத்த வைப்புத்தொகை 25.9 சதவீதம் அதிகரித்து ரூ.3,48,583 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் சொத்துத் தரம் கணிசமாக முன்னேற்றம் அடைந்துள்ளது; மொத்த வாராக்கடன் விகிதம் கடந்த ஆண்டின் 1.86 சதவீதத்திலிருந்து 1.32 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் விகிதம் 0.53 சதவீதத்திலிருந்து 0.40 சதவீதமாகவும் குறைந்துள்ளது. 

செலவுகளை விட வருவாய் வளர்ச்சி சிறப்பாக உள்ளதால் லாபம் கணிசமாக அதிகரித்துள்ளதாக வங்கியின் நிர்வாக இயக்குநர் வி. வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி
அதானி விண்ட் நிறுவனத்துக்கு 696 மெகாவாட் ஆர்டர்கள்
அடுத்த செய்தி
சீன டைட்டானியம் இறக்குமதிக்கு 5 ஆண்டு பொருள் குவிப்பு தடுப்பு வரி

தொடர்புடைய செய்திகள்